Posts

Showing posts from September, 2022

கட்டுரை

  தியாகராஜர், பாரதியார், கவிமணி  தேசிகவினாயகம் பிள்ளை  போன்றோரின் பாடல்கள் சிலவற்றை ஸ்வரப்படுத்தியிருக்கிறார்.  அண்ணாமலை ரெட்டியார் ரின் 'காவடிச்சிந்தையும்’ பதிப்பித்தார். ku azakirisami வில்லியம் தாமஸ் சத்தியநாதனின் ( டபிள்யூ.டி.சத்தியநாதன் ) குடும்பத்துடன் தங்கினார். 1878-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கிருபா சத்தியநாதன் மருத்துவப்பணியில் காசநோய் தொற்றுக்கு ஆளானார். 1879-ல் புனேவில் உள்ள தனது சகோதரியிடம் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றார். கிருபா சத்தியநாதனின் மகன்  சாமுவேல் சத்தியநாதன் னை காதலித்து1881-ல் மணந்துகொண்டார். சாமுவேல் கேம்ப்ரிட்ஜ் மாணவர். சாமுவேல் ஊட்டியில் 'Breeks Memorial School' பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றச் சென்றார். கிருபா மருத்துவக் கல்வியை முடிக்காமல் ஊட்டிக்குச் சென்று அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். ஊட்டியில் அவருடைய காசநோய் கட்டுக்குள் இருந்தது. அங்குதான் அவர் தன் ஆரம்பகட்ட கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். கிருபா மதுரையில்  நான்காம் தமிழ்ச்சங்க த்தைத் தோற்றுவித்த பொ.  பாண்டித்துரைத் தேவர்  அக்டோபர் 17, 1902-ல் குமாரசாமிப்

KUNrAKKUDI

   குன்றக்குடி அடிகளாரின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்ககலையில் படிப்பதற்காக அவர் குடும்பம் சிதம்பரத்திற்கு இடம்பெயர்ந்தது.சிதம்பரம் அருகே திருவேட்களம் என்னும் ஊரில் வாடகைவீட்டில் வசித்தனர். சீனிவாசம் பிள்ளையும் குடும்பத்தினரும் மாடுகளை வளர்த்து பால் வணிகம் செய்தனர். பல்கலை கழகப் பேராசிரியர்களுக்கு பால் கொண்டுசென்று அளித்தபோது அவர்களிடம் அணுக்கமான குன்றக்குடி அடிகளார்  ந. மு. வேங்கடசாமி நாட்டார்  , ரா.பி. சேதுப்பிள்ளை  ,  சுவாமி விபுலானந்தர்  ஆகியோரிடம் அணுக்கமாகி தமிழார்வத்தை அடைந்தார். kunRakkudi  வெகு ஜன இதழ்களில் கோவி. மணிசேகரனின் படைப்புகள் தொடர்ந்து வெளியாகின.  குமுதம் , விகடன்,  கல்கி ,  கலைமகள் , குங்குமம், இதயம் பேசுகிறது என தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் எழுதினார். ’ஒரு தீபம் ஐந்து திரிகள்’ என்பது இவரது நூறாவது நாவல். ராஜராஜ சோழனின் வரலாற்றை கலைமகள் இதழில் ’ராஜநாகம்’ என்ற பெயரில் எழுதினார். கோவி. மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்.

sivaithaa

   சி.வை. தாமோதரம் பிள்ளை ஆரம்பக்காலத்தில் கிராமப் பாடசாலைமுறையான நிலாப்பள்ளியில் தந்தையிடம் படித்தார். சுன்னாகம் முத்துக்குமார நாவலரிடம் இலக்கணம் படித்தார். பின்னர் அமெரிக்க மிஷனரிகள் தொடங்கிய   வட்டுக்கோட்டை குருமடம்   அமைப்பில் 1844 அக்டோபர் 12 ஆம் தேதி சேர்ந்து 1850 வரை பயின்றார். தெல்லிப்பழை (தெல்லியம்பதி)   அமெரிக்க இலங்கை மிஷன்   கல்லூரியிலும் படித்தார் (1850-52). தமிழ்ப்புலவர் படிப்பில் சான்றிதழ் பெற்றார். ஆங்கில மொழி அறிவும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் பெற்றார். வட்டுக்கோட்டை குருமடத்துக்கு உரிமையான கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் 1852 செப்டெம்பர் முதல் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது மாணவர்களுக்காக குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கம் என்னும் நூலை உரை எழுதி வெளியிட்டார் என்று ஆய்வாளர் கூறுகின்றனர். 1855-ல் வட்டுக்கோட்டை குருமடம் மூடப்பட்டது. 1855-ல் சென்னையில்  பீட்டர் பெர்சிவல்  நடத்தி வந்த  தினவர்த்தமானி  வாரப்பத்திரிகையில் சி.வை.தாமோதரம்பிள்ளை உதவியாசிரியராகச் சேர்ந்தார். பத்திரிகைப் பணியுடன் பர்னல் பண்டிதர், வால்டர் எலியட், லூஷிங்டன் ஆகியோருக்கு தமிழ் கற்பிக்கும் பணியையும் செய

கட்டுரைகள்

    ஞானியார் சுவாமிகளின் இரு இயல்புகளை   திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்   தன் தன்வரலாற்றில் குறிப்பிடுவதை   வல்லிக்கண்ணன்   மேற்கோளாகச் சுட்டுகிறார். ஞானியார் சுவாமிகள் தன் 16-ஆவது வயதில் துறவு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அப்போது தன் ஆசிரியருக்கு வாக்களித்ததன்படி மடத்தின் தலைவருக்குரிய நோன்புகளில் சமரசம் செய்துகொள்ளவே இல்லை. தன் வாழ்நாள் முழுக்க மேனா என்னும் மூடிய பல்லக்கிலேயே பயணம் செய்தார். திரு.வி.க உள்ளிட்ட பலர் வற்புறுத்தியும் அவர் காரில் ஏறவில்லை. அவரை 1941-ல் இராமசாமி நாயுடு என்னும் அன்பர் தென்னாப்ரிக்காவுக்கு அழைத்தபோது தன் நோன்புகளுக்கு கடல்கடத்தல் எதிரானது என மறுத்துவிட்டார். ஆனால் குடை, கொடி, தீவட்டி, சாமரம் போன்ற பழங்கால வழக்கங்களை ஆடம்பரமானவை என தவிர்த்துவிட்டார். ஞானியார் அடிகள் வீரசைவத்தின் உறுதியான சைவப்பற்றை மதவெறியாக ஆக்கிக் கொள்ளவில்லை. வைணவர் இல்லங்களில் ஆண்டாள் வரலாறு உள்ளிட்ட சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். புதுச்சேரியில் சின்னையா ஞானப்பிரகாச முதலியார் என்னும் கிறிஸ்தவ அன்பரின் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்துக்குச் சென்று உரையாற்றினார். ஞானியார் சுவாமிகள் தலை

கட்டுரைகள்

  ஞானியார் சுவாமிகளின் இரு இயல்புகளை   திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்   தன் தன்வரலாற்றில் குறிப்பிடுவதை   வல்லிக்கண்ணன்   மேற்கோளாகச் சுட்டுகிறார். ஞானியார் சுவாமிகள் தன் 16-ஆவது வயதில் துறவு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அப்போது தன் ஆசிரியருக்கு வாக்களித்ததன்படி மடத்தின் தலைவருக்குரிய நோன்புகளில் சமரசம் செய்துகொள்ளவே இல்லை. தன் வாழ்நாள் முழுக்க மேனா என்னும் மூடிய பல்லக்கிலேயே பயணம் செய்தார். திரு.வி.க உள்ளிட்ட பலர் வற்புறுத்தியும் அவர் காரில் ஏறவில்லை. அவரை 1941-ல் இராமசாமி நாயுடு என்னும் அன்பர் தென்னாப்ரிக்காவுக்கு அழைத்தபோது தன் நோன்புகளுக்கு கடல்கடத்தல் எதிரானது என மறுத்துவிட்டார். ஆனால் குடை, கொடி, தீவட்டி, சாமரம் போன்ற பழங்கால வழக்கங்களை ஆடம்பரமானவை என தவிர்த்துவிட்டார். ஞானியார் அடிகள் வீரசைவத்தின் உறுதியான சைவப்பற்றை மதவெறியாக ஆக்கிக் கொள்ளவில்லை. வைணவர் இல்லங்களில் ஆண்டாள் வரலாறு உள்ளிட்ட சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். புதுச்சேரியில் சின்னையா ஞானப்பிரகாச முதலியார் என்னும் கிறிஸ்தவ அன்பரின் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்துக்குச் சென்று உரையாற்றினார். ஞானியார் சுவாமிகள் தலைமை

சுவே

   எம்.ஃபில் இறுதி ஆண்டில் மதுரையில்   சுந்தர ராமசாமி யக்கு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றை பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா, தி.சு. நடராஜன் உதவியுடன் ஏற்பாடு செய்தார். அதில்   வண்ணதாசன் ,   ஜெயமோகன் ,   சுரேஷ்குமார இந்திரஜித் , நா. ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு   சுந்தர ராமசாமியின்   படைப்புகள் பற்றி பேசினர். சு.வேணுகோபால் தன்னை இலக்கியவாதியாக உணர அந்த நிகழ்ச்சி வழிவகுத்தது. சு. வேணுகோபால் தன் எழுத்தின் இலக்கிய முன்னோடிகளாக  புதுமைப்பித்தன் ,  தி. ஜானகிராமன் ,  கு. அழகிரிசாமி ,  சுந்தர ராமசாமி  நால்வரையும் குறிப்பிடுகிறார்.  தி. ஜானகிராமனை  ஆதர்சமாகக் கருதுகிறார். "சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் எழுத்து நடையின் பாதிப்பு என்னிடம் இல்லாவிட்டாலும் அவர்கள் நான் எழுதக் காரணமானவர்கள். நான் எழுத்தாளன் என என்னைக் கர்வம் கொள்ளச் செய்தவர்கள். அந்த வகையில் அவர்கள் என் முன்னோடிகள்" என்கிறார் சு. வேணுகோபால். நாவல் edit edit source சு.வேணுகோபால் 1994-ஆம் ஆண்டு ’நுண்வெளி கிரகணங்கள்' என்ற தன் முதல் நாவலை எழுதி முடித்தார். இந்நாவல்  சுஜாதா  ஏற்பாடு செய்த 1995-ஆம் ஆண்டின் ’குமுதம் ஏர் இந்தியா