Posts

Showing posts from June, 2022

பெயர்கள்

Image
  To read the article in English:   Aram . ‎ அறம்: தமிழில் உள்ள ஒரு கலைச்சொல். சம்ஸ்கிருதத்தில் தர்மம், பிராகிருதத்திலும் பாலியிலும் தம்மம் ஆகிய சொற்களுக்கு ஏறத்தாழ இணையானது என்றாலும் தமிழுக்கே உரிய மேலதிக பொருள் கொண்டது. வெவ்வேறு காலகட்டங்களில் பொருளேற்றம் கொண்டு மாறிவந்தது. அறம் என்னும் சொல் பொதுவாக வாழ்க்கைநெறி, நீதி, விழுமியம், ஒழுக்கம், கொடை, நோன்பு ஆகியவற்றையும் வாழ்க்கையை இயக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்ச ஒழுங்கையும் சுட்டுவதாக தமிழில் கையாளப்படுகிறது. அறம்பாடுதல் என்றால் அறத்தை சான்றுக்கு அழைத்து சாபம் போடுதலாக பழங்காலத்தில் ஒரு மரபாக இருந்தது. அறம் =============== To read the article in English:   Abraham Pandithar . ‎ தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆபிரகாம் பண்டிதர் (ஆகஸ்ட் 2, 1859 - ஆகஸ்ட் 31, 1919) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். தமிழிசை இயக்கத்தின் முன்னோடி. இசை ஆய்வாளர், தமிழறிஞர். சித்த மருத்துவராகவும் தமிழ் கிறித்தவ கவிஞராகவும் இருந்தார். கர்ணாமிர்த சாகரம் என்னும் பெருநூல் வழியாக தொல்தமிழ் இசையின் பண் அமைப்பு முறையை கணிதரீதியாக விளக்கினார். பண் முறையே ராகங்களாகியது என்றும் அதுவே கர்நாடக சங

பதிவுகள்

   அ.ச.ஞானசம்பந்தன் தந்தையிடம் தொடக்க கல்வியை பெற்றார். பின்னர் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி முடித்து 1935-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இண்டர்மீடியட் படித்தார். அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த நாவலர்  சோமசுந்தர பாரதியார்  அவரது தமிழ் அறிவை அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும் போது வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி ,  திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் ,  ரா. ராகவையங்கார்  , தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்  போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது. அண்ணாமலை பல்கலையில் தமிழில் இளங்கலையும் முதுகலையும்  பயின்றார். a.sa,njaa ===================== கீதையின் அடிப்படையில் வேதாந்த மரபில் உடல் க்ஷேத்ரம் (ஆலயம்) என்றும் உடலில் உறையும் ஆத்மா க்ஷேத்ரக்ஞன்‌ (ஆலயத்தில் உறைவோன்) என்றும் சொல்லப்படுகிறது. ஞானம் முதிர்ந்த அவதூதர் உடலில்லாமல் தூய ஆத்மாவாகவே ஆனவர்கள் என்னும் பொருளில் க்ஷேத்ரக்ஞன்‌ எனப்படுவதுண்டு. இவர் அவதூதராக கருதப்பட்டமையால் இப்பெயர் வழக்கத்திற்கு வந்தது. க்ஷேத்திரங்கள் தோறும் சுற

பதிவுகள்

   இச்சூழலில்தான் அழகியல்விமர்சனம் மேலும் அழுத்தமான தேவை உடையதாகிறது. எவர் முன்னோடிகள், ஏன்  என்று அது நிறுவும். அவர்களின் எழுத்தின் அழகியல்போதாமைகள் வெற்றிகளை அடையாளம் காணும். அவர்கள் உருவாக்கிய தொடக்கத்தை கண்டறிந்து மேலே செல்லும் வழிகளை காட்டும். சொல்லப்போனால் ஆரோக்கியமான stem cell களை அடையாளம் காணும் முயற்சிதான் அழகியல் விமர்சனம் என்பது. நவீன் மலேசிய இலக்கிய முன்னோடியான அ.ரங்கசாமியின் நாவல்களை பற்றி எழுதியிருக்கும் இந்த இலக்கியவிமர்சனம் அவ்வகையில் மிக முக்கியமான ஒன்று *** கா.சிவத்தம்பி, தமிழ் விக்கி மா.இளங்கண்ணன் தமிழ் விக்கி ============================================ அ..ச.ஞானசம்பந்தன் தந்தையிடம் தொடக்க கல்வியை பெற்றார். பின்னர் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி முடித்து 1935-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இண்டர்மீடியட் படித்தார். அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த நாவலர்  சோமசுந்தர பாரதியார்  அவரது தமிழ் அறிவை அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும் போது வி.எஸ்.ஸ்ரீனிவாச

புதியவைந்

   லா.ச.ராமாமிர்தம் (லா.ச.ரா) (லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்) (அக்டோபர் 30, 1916 - அக்டோபர் 30, 2007) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். நனவோடை முறையில் சொல்விளையாட்டுக்களுடனும் நுண்ணிய பண்பாட்டுக் குறிப்புகளுடனும் எழுதப்பட்ட இவருடைய நடை புகழ்பெற்றது. உணர்ச்சிக்கொந்தளிப்பும் நுண்ணிய விவரணைகளும் இந்து மதமரபின் படிமங்களும் கலந்த கதைகள் இவருடையவை. இசையனுபவமும் மறைஞான அனுபவமும் அவற்றில் வெளிப்படுகின்றன லா.ச.ராமாமிர்தம் ================================== தஞ்சை பிரகாஷ் (ஜி. எம். எல். பிரகாஷ்) (1943 - பிப்ரவரி 27, 2000) தமிழில் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிய எழுத்தாளர். இலக்கியச் செயல்பாட்டாளர். பதிப்பாளர். தஞ்சையில் கதைசொல்லி என்னும் அமைப்பை நடத்தியவர். தமிழில் பாலியல் மீறல்களை பொதுவான எல்லைகளை மீறிச்சென்று எழுதியவர். ஆகவே ஒருசாராரால் தமிழிலக்கியத்தில் அந்தத்தளத்தில் முன்னோடி என கருதப்படுபவர். த ஞ்சை பிரகாஷ் --------------------------- சாரு நிவேதிதா (18 டிசம்பர் 1953) தமிழ் எழுத்தாளர். தமிழில் பின்நவீனத்துவ - பின் அமைப்பியல் சார்ந்த அழகியலைக் கொண்ட எழுத்தாளர்களில் முதன்மையானவ

பதிவுகள்

   எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி தமிழ் விக்கியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு என்றுமுள்ள ஒரு சந்தேகம் அகன்றது. இரண்டு எஸ்.ராமகிருஷ்ணன்கள் உள்ளனர். இருவருமே முக்கியமானவர்கள். இருவரைப்பற்றிய பதிவிலும் இன்னொருவர் குறிப்பிடப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு கலைக்களஞ்சியத்திற்குப் பின்னால் சரியான ஓர் ஆசிரியப் பிரக்ஞை தேவை என்பதற்குச் சான்றாக இதைக் கருதுகிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் ================================= எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி தமிழ் விக்கியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு என்றுமுள்ள ஒரு சந்தேகம் அகன்றது. இரண்டு எஸ்.ராமகிருஷ்ணன்கள் உள்ளனர். இருவருமே முக்கியமானவர்கள். இருவரைப்பற்றிய பதிவிலும் இன்னொருவர் குறிப்பிடப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு கலைக்களஞ்சியத்திற்குப் பின்னால் சரியான ஓர் ஆசிரியப் பிரக்ஞை தேவை என்பதற்குச் சான்றாக இதைக் கருதுகிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) ====================== விபுலானந்தர் என்றால் பெரும்பாலானவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்காது. சிலர் யாழ்நூல் என்பார்கள். யூபிஎஸ்சி போட்டித்தேர்வு எழுதுபவர்கள் தகவல்களை தேடி அலைவதைக் காணமுடிகிறது. இந்த விக்க

கட்டுரைகள்

   சுவாமி விபுலானந்தர் (மார்ச் 27, 1892 – ஜுலை 19, 1947) (சுவாமி விபுலாநந்தர், விபுலாநந்த அடிகள்,விபுலானந்த அடிகள்) இசைத்தமிழறிஞர், பேராசிரியர், துறவி. இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை என பல துறைகளில் இயங்கியவர். இசைத்தமிழ் ஆய்வு, இலக்கிய ஆய்வு, நாடகத்தமிழ் ஆய்வு, மொழியியல் என ஆய்வுப்பணிகளை விரித்துக் கொண்டவர். யாழ் நூல் என்ற இசைவரலாற்று நூலும், மதங்க சூளாமணி என்ற நாடக ஆய்வு நூலும் இவருடைய முக்கியமான படைப்புகள். முதன்மையாக தமிழிசை வரலாற்றில் மூலநூல்களில் ஒன்று என கருதப்படும் யாழ்நூல் இயற்றியவர் என அறியப்படுகிறார். விபுலானந்தர் ======================================== சயாம் மரணரயில்பாதை: (1942-1943) ‘சயாம் மரண ரயில்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் தாய்லாந்து – பர்மா இரயில் பாதை. இது இரண்டாம் உலகப்போரில் போது (செப்டம்பர் 16, 1942 - அக்டோபர் 17, 1943) கட்டப்பட்ட 415 கி.மீ (258 மைல்கள்) நீளமுள்ள ரயில்பாதை. தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் நோக்கத்தில் ஜப்பானியர்களால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் ஏறக்குறைய 1,80,000 லிருந்து 2,50,000 ஆசியத் தொழில

பதிவுகள்

   அ. ரெங்கசாமி (1930) மலேசியாவில் வாழும் நாவலாசிரியர். இவரது நாவல்கள் மலேசிய இந்தியர்களின் இக்கட்டான வரலாற்று தருணங்களைக் கருப்பொருளாகக் கொண்டவை. 'கோலலங்காட் ரெங்கசாமி' எனும் புனைப்பெயரால் அறியப்படுகிறார். அரெங்கசாமி ====================================== காடைகுலம் :கொங்குவேளாளக் கவுண்டர் குலத்தவரின் உட்பிரிவுகளான கூட்டம் என்னும் அமைப்பில் ஒன்று. காடைக்கூட்டம், காடை குலம் என அழைக்கப்படுகிறது. கொங்குவேளாளர் கூட்டங்களில் இதுவே பெரியது. சாகாடன் நக்கன், சாகாடன் சிற்றன் போன்ற பெயர்கள் நடுகற்களில் காணப்படுகிறது. காடன் என்பது மூதாதை பெயராக இருக்க வாய்ப்புண்டு. இது கொங்கு வேளார்களின் அறுபது கூட்டங்களில் ஒன்று. (பார்க்க  கொங்குவேளாளர் கூட்டங்கள் ) ========================= காடைகுலம் ===================================== சுவாமி விபுலானந்தர் (மார்ச் 27, 1892 – ஜுலை 19, 1947) இசைத்தமிழறிஞர், பேராசிரியர், துறவி. இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை என பல துறைகளில் இயங்கியவர். இசைத்தமிழ் ஆய்வு, இலக்கிய ஆய்வு, நாடகத்தமிழ் ஆய்வு, மொழியியல் என ஆய்வுப்பணிகளை விரித்துக் கொண்டவர். யாழ் நூ

womn

அசலாம்பிகை அம்மணி அம்மாள் அழகியநாயகி அம்மாள் ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள் ஆர்.சூடாமணி ஆர்.பொன்னம்மாள் எஸ். விசாலாட்சி எஸ். அம்புஜம்மாள் கமலா சடகோபன் கமலா பத்மநாபன் கமலா விருத்தாசலம் கிருத்திகா கிருபா சத்தியநாதன் கி.சரஸ்வதி அம்மாள் கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப்புலவர் “தமிழ்ப்புலவர் வரிசை” என்னும் பெயரில் 31 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் மேலான தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார். அதே போல தமிழகத்திலுள்ள சமண, பெளத்த தலங்களைப் பற்றிய தொகுப்புகளை ”தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள்” போன்ற புத்தகங்கள் வழி ஏ. ஏகாம்பர நாதன் சாத்தியப்படுத்தியுள்ளார். ஈழத்து கூத்து கலைஞர்கள், கூத்துக்கலை பற்றிய தொகுப்புகளாக பேராசிரியர் மெளனகுரு ஐயாவின் “பழையதும் புதியதும்”; ”கூத்த யாத்திரை” புத்தகங்கள் ஒட்டுமொத்த கூத்துக் கலைஞர்கள், அண்ணாவியார்கள் பற்றிய விரிவான சித்திரத்தை அளிக்கக்கூடியதாக இருந்தது. இப்படி தொகுப்பு நூல்கள் பலவகைகளில் வருகின்றன. சமீபத்தில் அழிசி ஸ்ரீநி “எழுத்து” இதழ்களை கிண்டிலில் குறிப்பிட்ட காலத்து வாசிப்பதற்கு இலவசமாக அளித்தார். இதழ்கள் வாயிலாக முன்னோடி  எழுத்தாளர்களின் கட்டுரைக