Posts

Showing posts from August, 2020

உடையாள் 10

Image
  19,தேடல் பிரபஞ்சம் மிகமிகப்பெரியது. அதற்கு முடிவே இல்லை. ஏனென்றால் முடிவு என இருந்தால் அதற்கு அப்பால் என்ன இருக்கும்? அதற்கு அப்பால் என்ன இருந்தாலும் அதுவும் பிரபஞ்சம்தான். பிரபஞ்சத்தின் மிகமிக தொலைவில் ஒரு கோள் இருந்தது. அதற்கு நீலப்பந்து என்று பெயர். அது பசுமையான காடுகளால் நிறைந்திருந்தது. அதில் ஏராளமான உயிரினங்கள் இருந்தன.விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் எல்லாமே இருந்தன. அங்கே மனிதர்கள் வாழ்ந்தார்கள். அந்த உயிர்கள் எல்லாமே பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கே வந்து குடியேறியவை. அங்கிருந்த மனிதர்கள்தான் அவற்றை கொண்டுவந்தார்கள். அவர்கள் முன்பு சூரியன் என்ற நட்சத்திரத்தின் ஒரு கோளான பூமியில் வாழ்ந்தனர். பூமியில் அவர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார்கள். பூமியை துளையிட்டு அதன் உள்ளிருந்த கரியை வெளியே எடுத்து எரித்தனர். கார்பன்டையாக்சைட் வெளிவந்து பூமியை மூடியது. அதன் வெப்பம் அதிகரித்தது விளைவாக காடுகள் அழிந்தன. மக்கள் அங்கே வாழமுடியாமலாகியது. அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். பெரிய போர்கள் நடந்தன. எளியவர்களை ஆற்றல்மிக்கவர்கள் அழித்தனர் அந்தப்போர்களில் எஞ்சியவர்கள் வேறு இ

உடையாள்-9

Image
  17, பசுமை நாமி நட்ட செடிகளெல்லாம் மிக விரைவாக வளர்ந்தன.ஒவ்வொரு நாளும் அவள் வெளியே போகும்போது செடிகள் வளர்ந்துகொண்டே இருப்பதை பார்த்தாள். இலைகள் பெருகி கிளைகள் விரிந்தன. அச்செடிகள் விரைவிலேயே மரங்களாக மாறின. அவற்றில் காய்கள் போல பாக்டீரியாக் கொத்துக்கள் உருவாயின. அந்தக் கொத்துக்களில் இனிப்பான மாவு இருந்தது. அந்த மாவு உருளைகளை அங்கிருந்த தியோக்கள் சாப்பிட்டார்கள்.அவர்கள் தங்கள் கைகளை அந்த காய்கள் மேல் வைத்தனர். கையிலிருந்த அமீபாக்கள் கலைந்து காய்களைச் சூழ்ந்துகொண்டன. அந்த காய்களை உடலுக்குள் இழுத்துக்கொண்டன உணவு பெருகியபோது 7க்கள் மேலும் பெருகினார்கள். மரங்களுக்கு நடுவே நாமி நடந்தபோது அங்கே 7க்கள் அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்தாள். உணவு உண்டதும் அவை ஆங்காங்கே நிழலில் படுத்து ஓய்வெடுத்தன நாமி அதைப்பற்றி குருவிடம் கேட்டாள். “அவை தூங்குகின்றன. அவை அமீபாக்கள் அல்லவா? அமீபாக்களுக்கு தூக்கம் உண்டா?” என்று கேட்டாள் குரு சொன்னது “இல்லை. அமீபாக்களுக்கு தூக்கம் கிடையாது. ஆனால் அமீபாக்கள் உடலை அசைப்பதில்லை. அவை எங்காவது ஒட்டியிருக்கின்றன. அல்லது மிதந்து செல்கின்றன. ஆனால் இவை உடல் வடிவம்

உடையாள்-8

Image
  நாமி மீண்டும் வெளியே வந்தபோது காலை விடிய ஆரம்பித்திருந்தது. மெல்லிய வெளிச்சம் மண்மேல் பரவியிருந்தது. தெற்கே வானத்தின் விளிம்பு ஒரு ஒளிரும் கோடுபோல வளைந்து தெரிந்தது. வானில் விண்கற்கள் மின்னியபடி பறந்துசென்றன. அவ்வப்போது சில கற்கள் மின்மினி போல தொலைவில் விழுந்தன அவள் மங்கலான வெளிச்சத்தில் நடந்து சென்றாள். அப்போது தொலைவில் எவரோ நடந்துசெல்வதைக் கண்டாள். அவளுடைய அதே அளவுகள் கொண்ட உருவம். அவள் அதைநோக்கி சென்றாள். அந்த உருவம் பாறைகளின் மேல் தொற்றி ஏறிக்கொண்டிருந்தது அவள் பாறைகளை அணுகியபோது பாறைகளின்மேல் அதேவடிவில் நாலைந்து உருவங்கள் இருப்பதைக் கண்டு வியந்து நின்றுவிட்டாள். எல்லா உருவங்களும் ஒன்றுபோலவே தோன்றின. அவை அனைத்தும் பாறைகளின்மேல் ஏறிக்கொண்டிருந்தன அவள் அவை என்ன செய்கின்றன என்று கூர்ந்து பார்த்தாள். அவை பாறைகளில் ஏறிச் சென்றன. பாறைகளின் சரிவுகளில் உடலை ஒட்டிக்கொண்டன. அவற்றின் உடல் எறும்புக்கூட்டம் கலைவதுபோல கலைந்தது. அவற்றின் வடிவம் சிதைந்தது. பிறகு அவை மீண்டும் உருவம் அடைந்தன அவள் மேலும் அருகே சென்றாள். அப்போது தெற்குவானில் மஞ்சள்குள்ளனின் விளிம்பு தோன்றியது. எங்கும் வெளிச்

உடையாள்-7

Image
  நாமி மறுநாள் வெளியே சென்றபோது கதிரியக்க காப்பு உடையை அணியவில்லை. ஆக்ஸிஜன் கொண்டுசெல்லவுமில்லை. இயல்பாக கதவை திறந்து வெளியே சென்றாள். அங்கே அவளுக்கு ஒன்றுமே ஆகவில்லை. அவள் கைகளை விரித்து கூச்சலிட்டாள். சிரித்துக்கொண்டே அந்த தங்க நிறமான மணலில் ஓடினாள். பிறகு அவள் அந்தப்புழுதியில் அமர்ந்து தன் கையை அதில் வைத்து அழுத்தினாள். குனிந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தப்புழுதியில் பெரும்பகுதி அமீபாக்கள் என்பதை அவள் கண்டாள். அவை மணல்போல ஒன்றாகத் திரண்டிருந்தன. அவை அவளுடைய கைபதிந்த பள்ளத்தில் வந்து நிறைந்தன சற்றுநேரத்தில் அவளுடைய கையின் வடிவத்தில் அமீபாக்கள் திரண்டு உடலாக மாறின. அந்தக் கை ஐந்து விரல்களையும் ஐந்து கால்களாக ஊன்றி தாவி ஓடியது. நாமி சிரித்தபடி அந்த கையை பிடிக்க முயன்றாள். அந்தக்கை தன் சுட்டுவிரலையும் நடுவிரலையும் கால்களாக ஊன்றி நின்று துள்ளியது. கட்டைவிரலையும் சிறுவிரலையும் இரண்டு கைகளாக விரித்தது. நின்று சுழன்று நடனமாடியது. நாமி உரக்கச் சிரித்துக்கொண்டு மேலும் மேலும் கைகளை புழுதியில் வைத்து அழுத்தினாள். ஒவ்வொன்றிலிருந்தும் கைவடிவமான உயிர்கள் உருவாகி வந்தன அவை து

உடையாள்-6

Image
  11. உயிர்க்கூட்டு நாமி தன் கண்ணாடிக் குமிழிக்குள் வந்ததும் கணிப்பொறியை நோக்கித்தான் ஓடினாள். அதன்முன் அமர்ந்தாள். அவள் படபடப்பாக இருந்தாள். கணிப்பொறியில் குரு தோன்றி அவளை பார்த்துக்கொண்டிருந்தது. குருவுக்கு எந்த உருவமும் இல்லை. அதை எப்படி வேண்டுமென்றாலும் அமைத்துக்கொள்ளலாம். நாமி குருவுக்கு முதலில் உருவம் கொடுக்கவில்லை. வெறும்குரலாகவே கேட்டுக்கொண்டிருந்தாள். அதன்பின் அவள் அதற்கு ஓர் அறிவிலாளரின் முகத்தை அளித்தாள்.. முன்பு பூமியில் வாழ்ந்த அறிவியலாளரான ஐன்ஸ்டீனின் முகம் அது.சிலநாட்கள் கழித்து அதற்கு அவள் ஒரு தத்துவ ஞானியின் முகத்தை அளித்தாள். அது பூமியில் வாழ்ந்த ஷோப்பனோவர் என்ற அறிஞரின் முகம் அதன்பின் அவள் குருவுக்கு ஒரு கவிஞரின் முகத்தை அளித்தாள். பலவாறாகத் தேடி அவள் அந்த முகத்தை கண்டடைந்தாள்.அந்த முகம் பூமியில் வாழ்ந்த கவிஞரான ஷேக்ஸ்பியருடையது அதன்பின் அவள் இந்த எல்லா இயல்புகளும் கலந்த ஒரு முகத்துக்காக தேடினாள். அந்த முகத்தின் ஓவியம்தான் இருந்தது. அதை அவள் தேர்ந்தெடுத்தாள். அது தொன்மையான முனிவரான வியாசரின் முகம். குரு பொதுவாக வியாசரின் முகம் கொண்டிருந்தது. தேவைப்படும்போது