பதிவுகள்
அ.ச.ஞானசம்பந்தன் தந்தையிடம் தொடக்க கல்வியை பெற்றார். பின்னர் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி முடித்து 1935-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இண்டர்மீடியட் படித்தார். அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் அவரது தமிழ் அறிவை அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும் போது வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி , திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், ரா. ராகவையங்கார் ,தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது. அண்ணாமலை பல்கலையில் தமிழில் இளங்கலையும் முதுகலையும் பயின்றார். a.sa,njaa
=====================
கீதையின் அடிப்படையில் வேதாந்த மரபில் உடல் க்ஷேத்ரம் (ஆலயம்) என்றும் உடலில் உறையும் ஆத்மா க்ஷேத்ரக்ஞன் (ஆலயத்தில் உறைவோன்) என்றும் சொல்லப்படுகிறது. ஞானம் முதிர்ந்த அவதூதர் உடலில்லாமல் தூய ஆத்மாவாகவே ஆனவர்கள் என்னும் பொருளில் க்ஷேத்ரக்ஞன் எனப்படுவதுண்டு. இவர் அவதூதராக கருதப்பட்டமையால் இப்பெயர் வழக்கத்திற்கு வந்தது. க்ஷேத்திரங்கள் தோறும் சுற்றிய காரணத்தினால் இவருக்கு 'க்ஷேத்ரக்ஞர்' என்று பெயர் வந்தது என்பவரும் உண்டு. க்ஷேத்ரக்ஞன் என்ற சொல்லுக்கு க்ஷேத்ரங்களை
-------------------------------
Comments
Post a Comment