தலைப்புகள்

  எம்.ஃபில் இறுதி ஆண்டில் மதுரையில் சுந்தர ராமசாமியக்கு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றை பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா, தி.சு. நடராஜன் உதவியுடன் ஏற்பாடு செய்தார். அதில் வண்ணதாசன், ஜெயமோகன், சுரேஷ்குமார இந்திரஜித், நா. ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சுந்தர ராமசாமியின் படைப்புகள் பற்றி பேசினர். சு.வேணுகோபால் தன்னை இலக்கியவாதியாக உணர அந்த நிகழ்ச்சி வழிவகுத்தது.

சு. வேணுகோபால் தன் எழுத்தின் இலக்கிய முன்னோடிகளாக புதுமைப்பித்தன்தி. ஜானகிராமன்கு. அழகிரிசாமி

சு.வேணுகோபால் தமிழ் விக்கி

அ. முத்துலிங்கம் 'சுருக்கமாக, வாழ்வின் அற்புதங்களையும், அபத்தங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது தெய்வீகனது 'உன் கடவுளிடம் போ' தொகுப்பு - என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘புலம்பெயர் எழுத்தாளர்களிடம் மட்டுமல்லாமல், இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களிடமும் வெளிப்படும் பண்பாட்டுச் சிக்கலும் பதற்றமும். தனிநபராக கீழ்த்திசை மனிதர்கள் மேற்கத்திய மனநிலைக்குள் நுழையமுடியாமல் தவிப்பது நீண்ட காலச் சிக்கல். அச்சிக்கலை ப.தெய்வீகன் சரியாகக் கதையாக்கியிருக்கிறார்’ என்று விமர்சகர் பேரா.அ.ராமசாமி குறிப்பிடுகிறார்.

தெய்வீகன் தமிழ் விக்கி

சென்னையை அடுத்து ஆவடியில் அமைந்துள்ள திருமுல்லைவாசல் என்னும் ஊரில் கோயில்கொண்ட மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தைப் பற்றிய தலபுராணம் இது. வடதிருமுல்லைவாயிற் புராணம் மகாவித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளையால் 1898-ல் எழுதப்பட்டது. சென்னை தாம்ஸன் கம்பெனியால் 1903-ல் மினர்வா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது.

வடதிருமுல்லைவாயில் புராணம்

சென்னையை அடுத்து ஆவடியில் அமைந்துள்ள திருமுல்லைவாசல் என்னும் ஊரில் கோயில்கொண்ட மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தைப் பற்றிய தலபுராணம் இது. வடதிருமுல்லைவாயிற் புராணம் மகாவித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளையால் 1898-ல் எழுதப்பட்டது. சென்னை தாம்ஸன் கம்பெனியால் 1903-ல் மினர்வா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது.

ஜி. நாகராஜன் முதலில் காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் ஜி.நாகராஜனின் சிந்தனையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர். சரஸ்வதி ஆசிரியர் வ.விஜயபாஸ்கரனுடன் தொடர்ச்சியாக கடிதத்தொடர்பில் இருந்தார். கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பாலதண்டாயுதம், ஆர்.கே.கண்ணன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிவந்தார். ஜி.நாகராஜன் மற்ற எழுத்தாளர்களைப் போல கம்யூனிஸ்டுக் கட்சியின் மனிதாபிமான இலட்சியவாதக் கொள்கைகளாலோ, அரசியல்போராட்டங்களாலோ கவரப்பட்டு கட்சிக்குள் சென்றவர் அல்ல. கம்யூனிஸ்ட் தத்துவ அடிப்படையை முறையாக கற்று அதன் மீதான நம்பிக்கையில் கட்சியில் சேர்ந்தார். அக்காலகட்டத்தில் கட்சி சித்தாந்தங்களை முழுமையாக வாசித்தறிந்தவர் என்னும் இடம் அவருக்கு இருந்தது.

கணிதத்தில் தீவிரமான ஆர்வமும், தனித்திறமையும் கொண்டிருந்த ஜி.நாகராஜனை மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் கணிதத்தில் உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு நிதியுதவியுடன் அனுப்ப எண்ணம் கொண்டிருந்தது. அவர் அன்று கணிதத்தில் ஒரு வளரும் மேதையாகவே கருதப்பட்டார். ஆனால் ஜி.நாகராஜன் கம்யூனிஸ்டுக் கட்சியில் ஆற்றிய அரசியல் செயல்பாடுகள் காரணமாக அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தால் ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மதுரையில் இருந்து திருநெல்வேலி வந்து நா. வானமாமலைநடத்தி வந்த தனியார் கல்லூரி (Tutorial college) ஒன்றில் ஆசிரியராகச் சேர்ந்தார். தொ.மு.சி. ரகுநாதன்சுந்தர ராமசாமிகிருஷ்ணன் நம்பி போன்றவர்களோடு இக்காலத்தில் தொடர்பு ஏற்பட்டது. ஜி.நாகராஜன் நவீன இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கியது இக்காலகட்டத்தில்தான்.

Comments

Popular posts from this blog

உடையாள்-6

உடையாள்-7

கட்டுரை