பதிவுகள்2

உ.வே.சாமிநாதையர் (பிப்ரவரி 19, 1855 – ஏப்ரல் 28, 1942) உ.வே.சாமிநாத ஐயர். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயர். சுருக்கமாக உ.வே.சா. தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர். வாழ்க்கை வரலாற்றெழுத்திலும் முன்னோடியாகக் கருதப்படுபவர். உ.வே.சாமிநாதையர் தமிழ்வாணன் (மே 22, 1926 - நவம்பர் 10, 1977) எழுத்தாளர், இதழாளர் மற்றும் பொது ஆளுமை. சிறுவர்களுக்கான இதழாக தொடங்கப்பட்டு முதிரா இளைஞர்களுக்கான பொதுஅறிவு இதழாக நடத்தப்பட்ட கல்கண்டு இதழின் ஆசிரியர். பல்துறை வித்தகர் என தன்னை அறிவித்துக்கொண்டு அனைத்து துறைகளைப் பற்றியும் அடிப்படைத் தகவல்களை எழுதினார். துப்பறியும் கதைகளையும் எழுதினார். தமிழ்வாணன் சிவசங்கரி (அக்டோபர் 14, 1942) தமிழில் பொது வாசிப்புக்கான சமூக நாவல்களை எழுதிய எழுத்தாளர். இவர் மத்திய தர மக்களின் வாழ்க்கையை கதைக்களனாக கொண்டு பல சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் எழுதியிருக்கிறார். பெண்களின் உரிமைகள் மற்றும் பாலியல் சுதந்திரம் ஆகியவற்றை கருக்களாகக் கொண்டு எழுதியவர். குடி முதலிய சமூகத்தீங்குகளை எதிர்த்தும் எழுதியிருக்கிறார். இந்திய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கும் இலக்கிய முயற்சியான ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ தமிழுக்கு இவருடைய கொடை. சிவசங்கரி வாஸந்தி (வாசந்தி சுந்தரம்) (ஜூன் 26, 1941) எழுத்தாளர், கட்டுரையளர், இதழாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர். தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியிருக்கிறார். சமகால அரசியல் நிகழ்வுகளை ஒட்டி எழுதிய நாவல்கள் புகழ்பெற்றவை. இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். வாசந்தி ச.து.சு. யோகியார் (சுப்பிரமணியன் / ச. து. சுப்பிரமணிய யோகி / சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகி) (நவம்பர் 30, 1904 – ஜூலை 27, 1963) எழுத்தாளர், தமிழறிஞர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர். சித்தர் மறைஞானத்திலும் யோகத்திலும் ஈடுபாடு கொண்டவர். யோகியார் கூத்தநூல் (சாத்தனார்): இது சாத்தனார் என்னும் கவிஞர் எழுதிய நாடக இலக்கண நூல். இந்நூலை ஏட்டுச்சுவடியில் இருந்து உரையெழுதிப் பதிப்பித்தவர் ச.து.சு.யோகியார். இது சங்ககால நூல் என்னும் தரப்பு உண்டு. ஆனால் பிற்காலத்தைய நூல், பெரும்பாலும் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கூத்தநூல்

Comments

Popular posts from this blog

கட்டுரை

உடையாள்- 1

thikasi