புதியவை

   சுத்தானந்த பாரதி (யோகி சுத்தானந்த பாரதியார்) (மே 11, 1897 - மார்ச் 7, 1990) தமிழறிஞர், துறவி, விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர். தமிழில் காப்பியம், கவிதை, நாடகம், நாட்டியம், இசைப்பாடல், வரலாறு, கடித இலக்கியம், வாழ்க்கை வரலாறு, சுயவரலாறு, நாட்டுவரலாறு, புனைகதைகள், பயண இலக்கியம், சிறுகதை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம் ஆன்மிகம், உடல்கூறு ஆய்வு, யோகம் எனப் பல துறைகளில் எழுதியவர். 'பாரதசக்தி காப்பியம்' அவரின் முக்கியமான படைப்புகளில் ஒன்று.

suththaanawtha paarathi

---------------------------------------------------------------------------

த. நா. குமாரசாமி, தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாஸ்திரி - ராஜம்மாள் தம்பதியருக்கு டிசம்பர் 24, 1907-ல் பிறந்தவர். த.நா.குமாரசாமியின் தந்தை தண்டலம் சங்கரநாராயண சாஸ்திரி தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் அறிந்த அறிஞர், எழுத்தாளர். போஜ சாஸ்திரம் என்னும் நாடகத்தை எழுதியவர். மகத மன்னர்கள், ஆதிசங்கரரின் காலம் போன்ற நூல்களின் ஆசிரியர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த. நா. சேனாபதி இவருக்கு ஏழுவயது இளைய சகோதரர்.

த.நா.குமாரசாமி 

-----------------------------------------------------------------------

தேசிக விநாயகம் பிள்ளை (கவிமணி ) (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) தமிழறிஞர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கல்வெட்டாய்வாளர். தமிழ் நவீன இலக்கியம் தோன்றிய காலகட்டத்தில் தேசிய இயக்கப் பாடல்கள், பக்திப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள் என பலவகையான பாடல்களை பாடியவர். கவிமணி என்று அழைக்கப்படுகிறார். தமிழகக் கல்வெட்டு ஆய்வின் முன்னோடிகளில் ஒருவர்

கவிமணி

--------------------------------------------------------------------------------

பொ. திரிகூடசுந்தரம் (1881-1969) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் எழுத்தாளர், வழக்கறிஞர், இதழாளர். வ.வே.சு.ஐயருடன் இணைந்து செயல்பட்டவர். பெரியசாமித் தூரன் ஆசிரியராகச் செயல்பட்ட முதல் தமிழ் கலைக்களஞ்சியத்தின் இணையாசிரியர். பேச்சாளர்.

பொ. திரிகூடசுந்தரம்

-------------------------------------------------------------

சி.வை. தாமோதரம் பிள்ளை (செப்டம்பர் 12, 1832 - ஜனவரி 1, 1901) பழந்தமிழ் நூல்களை சுவடிகளில் இருந்து பிழைநோக்கி அச்சில் பதிப்பித்த தமிழறிஞர்களில் ஒருவர். தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். எழுத்தாளர், உரைநடையாளர், கட்டுரையாளர், இதழாசிரியர், பதிப்பாளர், தமிழார்வலர் என தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்தவர். வழக்கறிஞராகவும் பின்னர் நீதிபதியாகவும் வாழ்க்கை நடத்திய இவர் தன் இறுதி காலங்கள் முழுவதும் பதிப்பகப் பணியிலும் எழுத்துப் பணியிலும் ஈடுபட்டார்

சிவை

-------------------------

ஆபிரகாம் பண்டிதர் (ஆகஸ்ட் 2, 1859 - ஆகஸ்ட் 31, 1919) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். தமிழிசை இயக்கத்தின் முன்னோடி. இசை ஆய்வாளர், தமிழறிஞர். சித்த மருத்துவராகவும் தமிழ் கிறித்தவ கவிஞராகவும் இருந்தார். கர்ணாமிர்த சாகரம் என்னும் பெருநூல் வழியாக தொல்தமிழ் இசையின் பண் அமைப்பு முறையை கணிதரீதியாக விளக்கினார். பண் முறையே ராகங்களாகியது என்றும் அதுவே கர்நாடக சங்கீதத்தின் அடிப்ப்படையாகவும், இந்துஸ்தானி இசையின் ராகமுறையாகவும் அமைந்தது என்றார்.

தஞ்சை ஆபிரகாம் பணித்ர்

-------------------------

கர்ணாமிர்த சாகரம் (1917, 1946) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய இசைநூல். தமிழிசையின் பண்பாட்டு அடித்தளம், அதன் வரலாற்று பின்னணி, அதன் பண்களின் அமைப்பு, பண்கள் உருவாகும் கணிதமுறை ஆகியவற்றை விவாதிக்கும் கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட நூல். தமிழிசை இயக்கத்தின் மூலநூல்களில் ஒன்று

கர்ணாமிர்த சாகரம்

 

Comments

Popular posts from this blog

கட்டுரை

உடையாள்- 1

thikasi