சயாம்
அன்புள்ள ஜெ
கோ.புண்ணியவான் பதிவு வழியாகச் சென்று கையறு வழியாக சயாம் மரண ரயில்பாதை என்ற பதிவை அடைந்தேன். இரவு 12 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். அத்தனை ஹைப்பர் லிங்குகளையும் படித்து முடிக்கையில் காலை நான்கரை. கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.
எவ்வளவு பெரிய அழிவு. தமிழர் வரலாற்றின் மாபெரும் அழிவு. ஆனால் அதைப்பற்றி ஒரு பதிவுகூட இல்லாமல் அரைநூற்றாண்டை தமிழகம் தாண்டிவந்துவிட்டது என்று படித்தபோது, இன்றுகூட ஒரு நினைவுச்சின்னம் இல்லை என்று தெரிந்துகொண்டபோது கண்ணீர் கோத்துக்கொண்டது.
அங்குமிங்கும் மேலோட்டமான பதிவுகளை நானும் கண்டதுண்டு. சயாம் மரணரயில் நாவலைக்கூட படித்திருக்கிறேன். இந்தப் பதிவு வெறுந்தகவல்கள் வழியாகவே நாவல்களை விட உக்கிரமான சித்திரத்தை அளிக்கிறது. எவ்வளவு லிங்குகள். அந்த பேரழிவை வரைந்த ஓவியர்கள். அவர்களின் பிற்கால வாழ்க்கை. அந்த பேரழிவை நிகழ்த்திய ஜப்பானிய ஜெனரல்கள். அதைப்பற்றி எழுதிய எழுத்தாளர்கள்....ஜாக் சாக்கர் ஓவியர் ,பிலிப் மெனின்ஸ்கி ,ஜான் மென்னி ,ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட், ரொனால்ட் சியர்ல், ஜான் கோஸ்ட் ,ஏர்னஸ்ட் கோர்டான், ஹிரோஷி ஆபே ,எகுமா இஷிடா
பிரம்மாண்டமான ஒரு வரலாறு. முழுமையாக பதிவாகியிருக்கிறது அது. அண்மையில் இதற்கிணையான ஒரு நூலைக்கூட படித்ததில்லை
Comments
Post a Comment