பதிவு
இளமையிலேயே மறைமலையடிகள் மீது தேவநேயப் பாவாணர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரை தமிழை மீட்கவந்தவராகவே கருதினார். மறைமலையடிகளின் தனித்தமிழியக்கத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார்.
ஸ்கீட் (Skeat, Walter W) எழுதிய Principles of English etymology: Skeat, Walter W. (Walter William), 1835-1912[1] என்னும் நூலைப் படித்த தேவநேயப் பாவாணர் அந்த நூலின் அடிப்படையில் தமிழ்ச் சொற்களின் பிறப்பு பற்றி ஆய்வு செய்து "செந்தமிழின் சொற்பிறப்பியல் நெறிமுறை” என்ற கட்டுரையை திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவந்த செந்தமிழ்ச் செல்வி இதழில் ஜூன் ,1931-ல் எழுதினார். தமிழுக்கும் திராவிட மொழிகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் சொல் பிறப்பியல் பற்றியும் ஆய்வு செய்தார்.
-------------------------------------------------------
தமிழறிஞரும் இலக்கிய புரவலருமான பாண்டித்துரைத் தேவர் 1901-ஆம் ஆண்டு சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் தமிழ்ச்சுவடிகளை காக்கவும், நூல்களை அச்சிடவும் ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தார். அந்த மாநாட்டில் நான்காம் தமிழ்ச் சங்கம் ஒன்றை மதுரையில் நிறுவுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. தொடக்க விழாவிற்கு மன்னர் பாஸ்கர சேதுபதியவர்கள் வந்திருந்தார். உ.வே. சாமிநாதையர், சடகோப ராமாநுஜாச்சாரியார், ரா.ராகவ ஐயங்கார், மு.இராகவையங்கார், பரிதிமாற் கலைஞர்,மு சண்முகம் பிள்ளை போன்றவர்கள் விழாவிற்கு வந்திருந்தனர்.
--------------------------------------------------------------------
கஜபாகு காலம்காட்டி முறைமைப்படி தமிழ்நூல்களின் காலத்தை கணிப்பதை தேவநேயப் பாவாணர் கண்டித்தார். தமிழ் நூல்கள் மேலும் தொன்மையானவை என வாதிட்டார். தமிழ் நூல்களின் காலத்தை சொற்களின் தொன்மை, அவை ஒன்றோடொன்று கொண்டுள்ள உறவு ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடவேண்டும் என்றார்.
====================================
கஜபாகு காலம்காட்டி முறைமை (கயவாகு காலம்காட்டி) (Gajabahu Synchronism) தமிழ் ஆய்வாளர் வி.கனகசபைப் பிள்ளை யால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை. இதை கனகசபைப் பிள்ளை தான் எழுதிய 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் என்னும் நூலில் விளக்கினார். இதையே பின்வந்த வரலாற்றறிஞர்கள் சங்ககால தமிழக வரலாற்றை கணிக்கும் முறையாக கையாண்டனர்.
======================================
யாழ்ப்பாணத்தில் மல்லாகம் ஊரைச்சேர்ந்த தமிழறிஞர் கரோல் விசுவநாதபிள்ளையின் மகனாக மே 25, 1855- ல் பிறந்தார்.விசுவநாதம் பிள்ளை இலங்கை வட்டுக்கோட்டை குருமடத்தில் பணியாற்றியபின் சென்னை வந்து பீட்டர் பெர்சிவல் மற்றும் போல் வின்ஸ்லோ ஆகியவர்களிடம் பணியாற்றினார். அவர் சி.வை. தாமோதரம் பிள்ளை யுடன் இணைந்து சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் இரு பட்டதாரிகளில் ஒருவரானார். சென்னை கோமளேசுவரன் பேட்டையில் அரசுப்பணியேற்று வசித்தார். அவர் மகனாகிய கனகசபை பிள்ளை. சிறு வயது முதல் தந்தையாரிடமே தமிழ் கற்று சென்னையில் பள்ளிக்கல்வியை முடித்து பிரசிடென்ஸி கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று சட்டப் படிப்பையும் முடித்தார்.
============================================
சி.வை.தாமோதரம் பிள்ளையின் தந்தை வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பில் பயின்று பண்டத்தரிப்பு அமெரிக்க மிஷன் பாடசாலையில் தலைமையாசிரியராகவும் கிறிஸ்தவப் பிரசங்கியாகவும் பணியாற்றினார். சி.வை.தாமோதரம் பிள்ளையின் கிறிஸ்தவப் பெயர் வின்ஸ்லோ கிங்ஸ்பரி. பின்னாளில் அவர் சைவத்திற்கு மாறினார் (யாழ்ப்பாணத்தில் கல்வி, வேலை ஆகியவற்றின்பொருட்டு பெயரளவே கிறிஸ்தவர்களாக இருக்கும் வழக்கம் அன்று இருந்தது). சிறுபிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை - சி.வை.தாமோதரம் பிள்ளை என்று பெயர் சூட்டிக்கொண்டார். அவர் பிறந்தது ஏழாலை என்ற குக்கிராமமாக இருந்தாலும் சிறுப்பிட்டி கிராமத்தையே தன் சொந்த ஊராகத் தாமோதரம் பிள்ளை கூறுகிறார். .
==============================================
பதிப்பாளராகவும், உரை நடையாளராகவும் இருந்தார். உதயதாரகை பத்திரிகையில் இவர் ஆசிரியராக இருந்தபோது சைவசமயம் குறித்த பல உரைநடைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் என நான்கு மொழிகளை அறிந்தவர். அரசுப் பேரகராதித் தொகுப்புக் குழு உறுப்பினர், கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறை உறுப்பினர் என்ப பல பதவிகளில் இருந்தவர். சென்னை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் இருந்தபோது தமிழ் மாணவர்களை சந்திப்பதும் ஊக்கப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
Comments
Post a Comment